இயற்கையாக மனதை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் ஒலியே ஸ்வரமாகும். சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ளவை சப்த ஸ்வரங்கள் ஆகும். இவ் ஏழு ஸ்வரங்களும் அவற்றிற்குரிய பண்டைய தமிழிசைப் பெயர்களும், அவற்றிற்குரிய இயற்கையான விலங்கொலிகள் கிழே கொடுக்கப்பட்டன:
Swaras are natural and melodic sounds which draw towards one's mind. There are 7 important notes for music. These notes are inspired from natural animal sounds. The 7 swara names (Sanskrit and Tamil) and the inspired animal sounds are given below:
சப்த ஸ்வரங்களில் பேதமற்ற ஸ்வரங்களை பிரக்ருதி ஸ்வரங்கள் எனப்படும். இவை அசையா ஸ்வரம், இயற்கை ஸ்வரம் என்றும் அழைக்கப்படும். சட்ஜம், பஞ்சமம் ஆகிய இரு ஸ்வரங்களும் பிரக்ருதி ஸ்வரங்களாகும். இவை அசைவின்றி பாடுவதால்/வாசிப்பதால் அசல ஸ்வரங்கள் எனப்படும்.
Among the saptha swaras, the Sadjam and Panchamam are called "prakruthi swaras", because they are sung/played without oscillations. These swaras are also called "natural swaras" or "non-oscillating swaras".
சப்த ஸ்வரங்களில் பேதமுள்ள ஸ்வரங்களை விக்ருதி ஸ்வரங்கள் எனப்படும். இவை அசையும் ஸ்வரம் என்றும் அழைக்கப்படும். ரிஷபம், காந்தராம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஐந்தையும் விக்ருதி ஸ்வரங்களாகும். இச் சுரங்கள் ஒவ்வொன்றும் கோமள, தீவ்ர என்று இரு பேதங்கள் உள்ளன.
Among the saptha swaras, the Rishabam, Gandharam, Madhyamam, Dhaivatham and Nishadam are called "vikruthi swaras", because they are sung/played according the raga (they have "semi-tunes"). These swaras are also called "oscillating swaras". For each vikruthi swara, there are 2 tune divisions: the lowertune (komala) and the uppertune (theevra). In the Western music, the tune divisions are equivalent to half-notes.
சட்ஜப் பஞ்சமத்தைத் தவிர மீதிய ஐந்து ஸ்வரங்கள் கோமள, தீவர பேததிற்குட்படுத்தப் படுகின்றன. இதனால் விக்ருதி ஸ்வரங்கள் 5x2=10 ஸ்வரஸ்தானங்களுடன் பிரகிருதி ஸ்வரங்களான "ஸ", "ப" ஆகிய இரண்டும் சேர்ந்து 10+2=12 ஸ்வரஸ்தானங்கள் உண்டாகின்றன.
இந்த 12 ஸ்வரஸ்தானங்கள் பின்வருவனவற்றில் விளக்குகின்றன:
As each vikruthi swaras has 2 tune divisions, they generate 5x2=10 swarastaanas. With the two prakruthi swaras (Sadjam and Panchamam), the saptha swaras create 10+2=12 swarastaanas which are given below:
மேற்கண்ட 12 ஸ்வரஸ்தானங்களில் சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய ஸ்வரஸ்தானங்கள் இரட்டைப் பெயர்களுடன் விளங்குகின்ற காரணத்தால் 12+4 = 16 ஸ்வரப் பெயர்கள் உண்டாகின்றன.
In the 12 Swarastaana list (cf. above), 4 swarastaanas are called diffrerently, according some ragas. Here are they:
Therefore, there are 12+4 = 16 swara names, according to some ragas. Here are these:
கர்நாடக சங்கீதத்திற்கு ஆதாரமாக விளங்குவது சுருதியாகும். பண்பட்ட காதுகளால் நாதத்தின் வேறுபாட்டை அறியக்கூடிய நுட்பமான ஒளியை சுருதி எனப்படும். சுருதியிளிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களின் சேர்கையால் ராகங்கள் கிடைக்கின்றன. ராகங்கள் பொலிவு பெறவும், சுருதியை ஒவ்வொரு ஸ்வரமும் அதற்கென்ற ஒலி நிலையில் ஒலிப்பதற்கும் நன்கு பயிற்சி செய்தல் வேண்டும்.
கர்நாடக இசையில் நுட்பமான சுருதியாகிய, நிர்ணயிக்கப்பட்ட சுருதியே மிகவும் சிறப்புடையதாகும். 7 ஸ்வரங்கள் 12 ஸ்வரஸ்தானங்கள் விரிவடைவது போல், 12 ஸ்வரஸ்தானங்கள் 22 நுண்ணிய சுருதிகளாக விரிவடைகின்றன. இந்த நுண்ணிய சுருதிகளை பண்டைத் தமிழிசையில் "அலகு" அல்லது "கோவை" என அழைத்தனர். சுருதிகளை 24, 27, 32, 48, 53, 96 எனக் கணக்கிட்டுக் கூறியுள்ளோரும் உள்ளனர். சுருதிகளின் அமைப்பினைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. சில சுருதிகளை சில ராகப்பிடிப்பிளிருந்துதான் அறிய இயலும்.
உ+ம்: கௌளை ரிஷபம், சாவேரி தைவதம், பேகட மத்யமம், வராளி மத்யமம்
சுருதிகளின் அளவுகளை பல வல்லுநர்கள் பலவிதமாகக் கூறியுள்ளனர். நாரதரின் சங்கீத மகரந்தம், பாரதரின் நாட்டிய சாஸ்திரம், சாரங்கதேவரின் அனுபவ சங்கீத விலாசா போன்ற நூல்களில் 22 சுருதிகள் என்பதைப் பலவிதமாகக் கணக்கிட்டுள்ளனர். இவற்றின் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்கு 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதேவரின் 22 சுருதி அளவுகளையே தற்போது இசைக்கு ஏற்றதாக அமைந்தது.
22 சுருதி அமைப்பில் ஒரு சுருதிக்கும் அதை அடுத்துவரும் சுருதிக்கும் உள்ள இடைவெளி ஏகஸ்ருதி என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஏகஸ்ருதி 3 வகை அளவுகளைப் பெற்றிருந்தது.
பூர்ண ஏகஸ்ருதி |
256/243 |
|
நியூன ஏகஸ்ருதி |
25/24 |
|
பிரமாண ஏகஸ்ருதி |
81/80 |
|