ஆயகலைகள் 64 ஆகும். அவற்றுள் முதன்மையானது சங்கீதக் கலையாகும்.
கல்வியை கலையென்றும், சாஸ்திரமென்றும் வகுக்கலாம். மேலும் கலையை சாமானியக் கலையென்றும், லலிதகலையென்றும் வகுக்கலாம். லலிதகலைகளை நுன்கலையென்றும் அழைக்கலாம். சங்கீதம், நடனம், நாடகம், சித்திரம், ஓவியம்
போன்றவை லலிதகலைகளுள் அடங்குகின்றன.