திரியாங்கமும் சடாங்கமும் -  The Triangas and Shadangas

திரியாங்கம் - The Triangas

 தாளத்தில் 3 அங்கங்கள் உண்டு. அவை திரியாங்கம் என்று அழைக்கப்படும். இந்த அங்கங்களை வைத்தே சப்த தாள அலங்காரங்கள் உருவாக்கப்  பட்டன. இம்மூன்று அங்கங்களினதும் அங்க அடையாளங்கள், அட்சரகாலம், செய்கைமுறை என்பன பின்வருமாறு :

அனுத்ருதம்  (U (பிறை)) - 1 அட்சரகாலம் - ஒரு தட்டு 

திருதம் (O (மதி)) - 2 அட்சரகாலம் - ஒரு தட்டு + ஒரு வீச்சு

லகு (I) - ஜாதிக் கேற்ப மாறும் - ஒரு தட்டு + விரல் எண்ணிக்கை 

லகுவின் ஜாதிபேத விபரம் - 

சடாங்கம் - The Shadangas


சப்த தாளம்  - The 7 Talas

கர்நாடக சங்கீதத்தில் 7 முக்கிய தாளங்கள் உண்டு. இவற்றை சப்த தாளங்கள் என்று அழைப்பர். சங்கீத பிதாமகராகிய ஸ்ரீ புரந்தரதாசர் இத் தாளங்களிலேயே சப்த தாள அலங்காரங்களை எழுதிப் பாடியுள்ளார்.

இந்த தாளங்கள் லகு (I), திருதம் (O), அனுத்ருதம் (U) ஆகிய திரியாங்கமிலிருந்து அமைக்கப்பட்டன. 

சப்த தாளங்களும் அவற்றின் அங்க அடையாளங்களும் பின்வருமாறு:

  • துருவ தாளம் (துருவம்) : I O I I
  • மட்ய தாளம் (மட்யம்) : I O I
  • ரூபக தாளம் (ரூபகம்) : O I 
  • ஜம்ப தாளம் (ஜம்பை) : I U O
  • த்ரிபுட தாளம் (த்ரிபுட) : I O O
  • அட தாளம் (அட) : I I O O
  • ஏக தாளம் (ஏகம்) : I

There are 7 Talas (or kinds of cyclic tempo) in the Carnatic music. These are called "Saptha Talas" ("Saptha" means seven in sanskrit). Sri Purandara Daasar (called as the "Father of the Carnatic music") has established and sung the Saptha Tala Alankaaras (compositions for beginners based on these talas). These talas are based from the Triangas (Lagu (I), Dhrutha (O), and Anudhrutha (U)).

The Saptha Talas are given below:

  • Dhruva Tala (Dhruvam) : I O I I
  • Matya Tala (Matyam) : I O I
  • Rupaka Tala (Rupakam) : O I
  • Jhampa Tala (Jhampai) : I U O
  • Triputa Tala (Triputa) : I O O
  • Ada Tala (Ada) : I I O O
  • Eka Tala (Ekam) : I