இந்த வலைவாசலில் வந்திருக்கும் அணைத்து நபர்களுக்கு எனது பணிவான வணக்கம்.
இந்தியத் துணைக்கண்டத்தில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்று இரு முக்கியமான இசைகள் உள்ளன. ஹிந்துஸ்தானி இசையோ ஐரோப்பியர்களாலும், வட அமெரிக்கர்களாலும் பரந்திருந்தாலும், கர்நாடக இசை
அவ்வளவு பெரிதாகப் பரக்கப்படவில்லை. சிலருக்கு கர்நாடக சங்கீதம் என்றொரு இசை இருக்கிறதே என்று தெரியாமல் இருக்கின்றார்கள். தொல்பழங்காலத்திலிருந்து நிலைநிற்கும் இவ்விசை உலகரீதியில்
தெரியப்படவில்லையே என்று எனக்குள் உள்ள ஒரு மனவருத்தம் இருக்கிறது. ஆதலால் கர்நாடக சங்கீதம் என்றால் என்ன, அதன் வரலாறு, அமைப்பு, மகிமை போன்ற விடயங்களை உலகிற்குத் தெரியப்படுத்தும் முகமாக
இந்த வலைத்தளம் உருவாக்கினேன்.
இந்த வலைத்தளம் கர்நாடக இசையை அறிய விரும்பியோரிலிருந்து கர்நாடக இசைத் தேர்வுகளை எடுக்கும் மாணவர்கள், பெரியோர்கள் வரை யாராயினும் அன்போடு அழைக்கும். இதில் ஸ்வர, தாள, இராக அறிவையும்,
கர்நாடக இசைத் தொடர்பாக வேறு விடயங்களையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான பாடங்களை வைத்திருக்கிறேன். இவை அனைத்தும் தாராளமாக பாவிக்கலாம், download செய்யலாம். ஆனால் இதை உங்கள்
வலைதளத்திற்கு post பண்ண விரும்பினாலோ, அல்லது பண, வர்த்தக ரீதியில் விற்க, வெளிக்காட்டினாலோ நான் எட்ட்ருக்கொள்ள மாட்டேன். இந்த பாடங்களில் யாதேனும் இயங்கள், குறைநிறைகள் கொள்ள
விரும்பினால் தயவு செய்து roshan454@hotmail.fr என்ற மின்னஞ்சலில் அனுப்பவும். நான் இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி
இரா. றொஷான்